லா ரோடா செஸ் தொடரில் வெற்றி பெற்ற சென்னை சிறுவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஸ்பெயின் நாட்டின் லா ரோடா செஸ் தொடரில் 15 வயதே ஆன நம் சென்னைச் சிறுவன் குகேஷ் அபாரமான வெற்றியைப் பெற்றிருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

தான் வென்றுள்ள முதல் திறந்த சுற்றுத் தொடரிலேயே, மிகவும் கடினமான போட்டியாளர்களுக்கு எதிராக, ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காமல் வென்றிருப்பது கட்டாயம் அவருக்குச் சிறப்பானதொரு உணர்வை அளித்திருக்கும்.

போலவே, இத்தொடரில் மூன்றாம் இடம் பிடித்துள்ள பிரக்ஞானந்தாவுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.