லக்னோவில் சாலை விபத்து – 5 பேர் பலி

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த கார் மீது ராம்பூர் நகர் தண்டா பகுதி அருகே பின்னால் வந்த வேன் ஒன்று மோதியது.  இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.

கார் ஓட்டுனர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இறந்தவர்களில் டெல்லி காவலரும் ஒருவர். மற்றாருவர் வருவாய்த்துறை அதிகாரி என கண்டறியப்பட்டுள்ளது.