ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.