Tamilசெய்திகள்

ரேசன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி

தமிழக சட்டசபையில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பனை வெல்லம் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பனை வெல்லம் ரேசன் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

100 கிராம், 250 கிராம், 500 கிராம், ஒரு கிலோ என விற்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம். கடைக்காரர்கள் கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது.

கலப்படம் இல்லாத ஒரிஜினல் பனை வெல்லம் கிலோ 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.