ரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதளம் தொடக்கம்

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால், மருந்து விற்பனை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும் ஏராளமானோர் திரண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து கொரோனா சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப ரெம்டெசிவிர் மருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் அரசு சார்பில் விற்பனை நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் தேவைப்படும் தனியார் மருத்துவமனைகள் https://tnmsc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.