ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ படப்பிடிப்பு முடிவடைந்தது

பிரபல நடிகையான ரெஜினா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூர்ப்பனகை’. இவருடன் இப்படத்தில் அக்‌ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ராஜு இயக்கி இருக்கும் இப்படம் இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ஆப்பிள் ட்ரி ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரித்திருக்கும் இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து பின்னணி வேலைகளை படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரெஜினா இப்படத்தில் தொல் பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்ததாக விரைவில் இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.