Tamilவிளையாட்டு

ரிஷப் பண்ட் முற்றிலும் வித்தியாசமானவர் – ப்ரையன் லாரா கருத்து

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் ரிஷப் பண்ட். எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக கருதப்பட்டார். ஆனால் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பி வருவதால் விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாரா கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை உருவாக்கி அணிக்கு வந்தவர். மிகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக ஒருவர் விரைவில் கிடைப்பாரா? என்று சிலர் எதிர்பார்த்த நிலையில், ரிஷப் பண்ட்-ஐ அப்படி பார்த்தார்கள். ஆனால், அவர் முற்றிலும் மாறுபட்ட வீரர்.

உலகக்கோப்பைக்கு இன்னும் 8 அல்லது 9 மாதங்களே உள்ளதால், இது இக்கட்டான காலம் என்பது எனக்குத் தெரியும். இன்னொரு விக்கெட் கீப்பரை வைத்துக் கொண்டு கூட இந்திய அணி செல்லலாம். ஆனால் ரிஷப் பண்ட் மீதான அதிகப்படியான நெருக்கடி தேவையில்லாதது.

மிகவும் வெற்றிக்கரமான அணியாக திகழும் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி ரிஷப் பண்ட்-க்கு ஆதரவு அளிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

30 வருடத்திற்கு முந்தைய வெஸ்ட் இண்டீஸ் அணியை நான் மீண்டும் திரும்பி பார்க்கிறேன். சில வீரர்கள் அணியில் சிறப்பாக செயல்படவில்லை. என்றாலும் அணியில் நீடித்தார்கள். ஏனென்றால், அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் தலைசிறந்த சிறந்த வீரர்கள் இருந்தார்கள். ஆனால், கஸ் லூகி அல்லது ஹார்ல் ஹூப்பர் பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால், அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், அவர்கள் முத்திர்ச்சி அடைய அனுமதிக்கப்பட்டார்கள். அதேபோல், ரிஷப் பண்ட் முதிர்ச்சி அடைய அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *