ரிஷப் பண்ட் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும் – ரவி சாஸ்திரி கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு கேப்டனாக உள்ளார்.

தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் 11 ஆட்டத்தில் 281 ரன் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு ஆட்டத்தில் 44 ரன் எடுத்தார்.

இந்த நிலையில் ரிஷப்பண்ட் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

20 ஓவர் போட்டி வடிவத்தில் ரிஷப்பண்ட் தனது ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடாது. அவர் ஆண்ட்ரே ரசல் போல் அதிரடியாக விளையாட வேண்டும்.

பந்து வீச்சாளர் யாராக இருந்தாலும் அதிரடியாக விளையாட வேண்டும் என்றால் அடித்து நொறுக்குங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான போட்டிகளில் வெற்றி கூட பெறக்கூடும்.

ரசல், தனது மனநிலையில் மிக தெளிவாக இருக்கிறார். அவர் களம் இறங்கியவுடன் அதிரடியாக விளையாடுவார். அந்த பாணியில் ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு முற்றிலும் திறமையானவர். அவர் தனது ஆட்டத்தின் போக்கை மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.