ரிலீஸுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்த சூரரைப் போற்று

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 100 கோடி வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் #SooraraiPottruHits100crPB என்ற ஹாஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.