ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் – சோனியா, ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21-ந் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *