ரஷ்யாவின் தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 6-வது நாள் ஆகிறது. தொடர்ந்து குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி தாக்குதலில் ரஷிய படைகள் ஈடுபட்டு வருகின்றன.

ரஷிய படை நடத்திய அதிரடி தாக்குதலில் 70 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதை ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தலைநகர் கீவ்வுக்கும்- கார்கிவ்வுக்கும் இடையே உள்ள ‘வொக்டியார்கா’ நகரில் உக்ரைன் ராணுவத் தளம் உள்ளது. இதன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளனர்.