ரஷியாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தியது அமேசான் நிறுவனம்

உக்ரைன் மீது ரஷியா 15-வது நாளுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், ரஷியாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமேசான் நிறுவனமும் தெரிவித்துள்ளது.