ரஜினியின் 169 வது திரைப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தற்போது விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் விஜேஎஸ்46, சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் படங்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் அறிவிப்பை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒரு வீடியோவின் மூலம் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி மாஸாக அமர்ந்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.