யுடியுப் சேனல் தொடங்கும் சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தை அடுத்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இந்நிலையில், நடிகர் சிம்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, வரும் வியாழக்கிழமை (22-10-2020) முதல் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் தளங்களில் இணைய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதற்கான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி கொண்டாடி வருகிறார்கள்.