மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் ஜாமீனில் இருந்து வருகிறார்.
இதற்கிடையே, பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மாடிப்படியில் இருந்து லாலு பிரசாத் தவறி விழுந்ததில் அவரது கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது. இதையடுத்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், லாலு பிரசாத்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். பாட்னாவில் இருந்து லாலு பிரசாத் இன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு லாலுவுக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.