மேற்கு வங்காள மாநில கவர்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்கு சேர்ந்த அவருக்கு பரிசோதனையில் மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

கவர்னர் ஜக்தீப் தன்கருக்கு சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.