‘மேயாத மான்’ போன்ற படங்களில் நடிக்க எனக்கு பிடிக்கும் – நடிகை வைபவ்

ஈசன், மங்காத்தா, கோவா, மேயாத மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் ‘பபூன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் வைபவ்வுக்கு ஜோடியாக ‘நட்பே துணை’ நாயகி அனகா நடித்துள்ளார்.

மேலும், ஜோஜு ஜார்ஜ், ஆந்தகுடி இளையராஜா, நரேன், மூணார் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். ‘பபூன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையடுத்து ‘பபூன்’ படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். ‘பபூன்’ படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். அதில், நடிகர் வைபவ், இந்த படத்துக்காக நிறைய யூடியூப் வீடியோ பார்த்து பபூன் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாங்க, “அவங்க உடல் மொழி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டு சினிமா தன்மைக்கு ஏற்றார்ப் போல் என்னை மாற்றிக் கொண்டேன். படம் ரொம்ப அழகா வந்திருக்கு. மேயாத மான் திரைப்படம் மாதிரி எல்லாம் பசங்களுக்கும் லவ் இருந்திருக்கும் அந்த மாதிரி படங்கள் நடிக்க எனக்கு பிடிக்கும்” என்றார்.