மும்பை இந்தியன்ஸ் அணியை டிரெண்டாக்கிய தமிழக ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் 8 நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையை மையமாக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மஞ்சள் கலரை பிடித்தமானதாக கொண்டுள்ளது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே எம்எஸ் டோனி கேப்டனாக உள்ளார். இந்த அணிக்கு உலகளவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

சென்னையை தவிர்த்து மற்ற அணிகளுக்கான சொந்த மைதானங்களில் விளையாடும்போதும் சென்னை அணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்த அணிக்கு பிடித்தமான கலர் ‘ப்ளூ’ ஆகும். ஹிட்மேன் ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுவதால் சென்னையை போன்று அதிக ரசிகர்களை கொண்டது மும்பை இந்தியன்ஸ்.

ஐபிஎல் 13-வது சீசன் நாளைமறுதினம் (சனிக்கிழமை, செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் ‘தமிழ்நாடுMIசாம்ராஜ்யம்’ என்ற ஹேஸ்டேக்கை தமிழ்நாடு, இந்தியா அளவில் டிரெண்டிங் ஆக்கியுள்ளனர்.