மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகியுள்ள பும்ராவுக்கு பதில் கேரள வீரர் சந்தீப் வாரியர் சேர்ப்பு

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.

இந்த நிலையில் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மும்பை அணி வீரர் பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வேகப்பந்துவீச்சாளார் சந்தீப் வாரியர் மும்பை அணியில் இணைந்துள்ளார்.

ரூ.50 லட்சத்துக்கு அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களுரு அணியுடன் வரும் 2-ம் தேதி மோதுகிறது.