மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி குழுவில் டெண்டுல்கரின் மகன்

ஐபிஎல் 2020 சீசன் வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்குகிறது. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதற்கான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 14-ந்தேதி (நேற்று முன்தினம்) மும்பை இந்தியன்ஸ் அணியின் ராகுல் சாஹர் சமூக இணையதளத்தில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். அதில் டிரென்ட் போல்ட், சவுரப் திவாரி, ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் சிலர் இடம்பிடித்திருந்தனர். அந்த படத்தில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் இடம்பெற்றிருந்தது ஏராளமான கேள்விகளை எழுப்பியது.

அப்போதுதான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் தெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வலைப்பயிற்சி பவுலராக சென்றுள்ளது தெரிய வந்தது. கிரேட் சச்சின் தெண்டுல்கரின் மகன் அணியிடம் இடம் பெற முடியாமல் வலைப்பயிற்சி பவுலராக மட்டுமே செல்ல முடிந்தது ஏமாற்றமே.