மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

ஐபிஎல் 13-வது சீசன் இறுதிப் போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த சீசனில் 2 லீக், குவாலிபையர்-1 என மூன்று முறை டெல்லியை துவம்சம் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இருந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘பின்னோக்கி பார்த்தீர்கள் என்றால், இது சிறந்த சீசன். இருந்தாலும் நாங்கள் இதுவரை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. நாங்கள் இங்கே வந்தது, கோப்பையை வெல்வதற்குதான். எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

இந்த தொடரில் சிறந்த அணியாக திகழ்ந்த வேலையில் தொடர்ந்து நான்னு தோல்வி என்பதை விரக்தியை ஏற்படுத்தியது. முக்கியமான போட்டியில் ஆர்சிபிக்கு எதிராகவும், நேற்று ஐதராபாத்துக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஐபிஎல் இறுதிப் போட்டியை எளிதாக நினைக்க வேண்டாம்’’ என்றார்.