மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 2 பேர் பலி

மும்பையின் தார்டியோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 தளங்கள் கொண்ட அந்த குடியிருப்பின் 18வது தளத்தில் தீப்பிடித்துளள்து. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது.

இந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.