முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்க உள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார்.

இதையடுத்து நாளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.