Tamilசினிமா

மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா!

2003-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான படம், ‘காக்க காக்க’. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு சூர்யாவை வைத்து ‘வாரணம் ஆயிரம்‘ படத்தை கவுதம் மேனன் இயக்கினார். இதில் அப்பா, மகன் என 2 வேடங்களில் சூர்யா நடித்தார்.

இந்த கூட்டணி அதன் பிறகு சேராமலே இருந்தது. இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்து வந்தனர். இடையில் 2014ல் இணையும் வாய்ப்பு வந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் அது நடக்கவில்லை. கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்தன. தற்போது இது உறுதியாகி உள்ளது.

சூர்யாவின் ‘காப்பான்’ வரும் 20ந்தேதி வெளியாக இருக்கிறது. தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை முடித்த பிறகு, சிவா இயக்க இருக்கும் படத்துக்கு செல்கிறார் சூர்யா. தவிர, பாலா இயக்கும் ஓர் படத்திலும் நடிக்கிறார். தற்போது கவுதம்மேனன் படமும் சூர்யாவின் படவரிசையில் இணைந்துள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்‘ உள்ளிட்ட படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *