மீண்டும் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ளதால், இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

இதற்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை முதல் தொடர்ந்து 40 நாட்கள் சிம்பு கலந்துக் கொள்ள இருக்கிறார். படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக நடிகர் சிம்பு நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். மேலும் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தரிசனமும் செய்திருக்கிறார். இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்பு – சுசீந்திரன் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாகவும், இசையமைப்பாளராக தமனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.