‘மாவிரன்’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

“டாக்டர்”, “டான்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். ‘மாவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘மாவீரன்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘மாவீரன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதல் பாடல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.