மார்ச் 23 ஆம் தேதி ‘தலைவி’ பட டிரைலர் ரிலீஸ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தலைவி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 23-ந் தேதி நடிகை கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளன்று தலைவி படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.