மார்ச் மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரர் விருது வென்றார் பாபர் அசாம்

ஐ.சி.சி. மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, மார்ச் மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரெய்க் பிராத்வெயிட், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

அதேபோல், பெண்களுக்கான பரிந்துரை பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன், லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் பாபர் அசாம் வென்றார். சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹெய்ன்சும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என ஐசிசி அறிவித்துள்ளது.