மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – காலியிறுதியில் பி.வி.சிந்து தோல்வி
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதியில் சீன தைபே வீராங்கனை தாய் சூ யிங்கை எதிர்கொண்டார். இந்தத் தொடரின் முதல்நிலை வீராங்கனையான யிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது வேகத்திற்கு பிவி சிந்துவால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் தாய் சூ யிங் 21-16, 21-16 என நேர்செட் கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
முதல் செட்டில் ஏராளமான தவறுகள் செய்ததால் பிவி சிந்து எளிதாக இழந்தார். 2-வது செட்டில் 11-20 என பின்தங்கிய நிலையில் தொடர்ச்சியாக ஐந்து புள்ளிகள் பெற்றார். இருந்தாலும் யிங் ஒரு புள்ளிகள் மட்டுமே பெற வேண்டிய நிலை இருந்ததால் பிவி சிந்துவால் 2-வது செட்டை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாய் சூ யிங்கை எதிர்த்து பிவி சிந்து 17 முறை விளையாடியுள்ளார். இதில் ஐந்து முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.