மதுரை மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு மாணவருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்குள்ள மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு அறையில் ஒரு மாணவர் என்ற வீதத்திலும், சமூக இடைவெளி, மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கல்லூரிகள் மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவுவது கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த மாணவருக்கு கொரோனோ உறுதியானதால் மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.