மதுபானி ரெயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ரெயிலில் தீ விபத்து!

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரியும் வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரெயிலில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிழக்கு மத்திய ரெயில்வேயின் சிபிஆர்ஓ கூறியதாவது:-

காலி ரெயிலில் ஏற்பட்ட தீ காலை 9.50 மணியளவில் அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.