மக்கள் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க திமுகவினர் களப்பணியாற்றிட வேண்டும். தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது!

தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற செயல் திட்டத்தை மீண்டும் தொடங்குவோம்.

ஆட்சியின் நடவடிக்கைகளுடன் திமுகவினரும் மக்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும். பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து கட்சி எம்எல்ஏக்களிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.