மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜூக்கு கொரோனா பாதிப்பு!

வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கோவையில் மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டபோது பொன்ராஜ் உடனிருந்தார்.

மக்கள் நீதி மய்யத்தில் இதுவரை 2 வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அக்கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.