‘மகான்’ படத்தின் ரிலீஸ் தகவலை வெளியிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல நடிகர் பட்டாளம் நடிக்கும் படம் மகான். விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருப்பதாலே படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தை பீசா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மகான் படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் படம் மகான் ரெடி ஆகிவிட்டது, விரைவில் ரிலீஸ் ஆகும். படத்தின் ரிலீஸ் தேதி புரொமோசன் பணிகள் விரைவில் நடைபெறும் என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

இதற்கு முன் இத்திரைப்படம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக பேசப்பட்டு வந்தது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே உண்மை தன்மை தெரியவரும், இருந்தும் கார்த்திக் சுப்பராஜின் இந்த பதிவு ஒருவேளை மகான் படம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிவிடுமோ என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.