மகளிர் தினத்திற்காக நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட சிறப்பு பாடல்

ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தான் நடித்து நடனம் ஆடியுள்ள WhattheUff எனும் பாடலை வெளியிட்டுள்ளார்.

கு.கார்த்திக் எழுதிய இந்த பாடலை ஹரிகா நாராயணன் பாடியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். நெல்சன் வெங்கடேசன் இந்த கான்செப்ட்டை எழுதி இயக்கியுள்ளார். இந்த பாடலில் நிவேதா பெத்துராஜின் நடனம் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.