மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்துடன் இந்தியா இன்று மோதல்

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. 3வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலாவதாக களம் இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தது.