போதைப் பொருள் வழக்கு – ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை

போதைப் பொருள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் சிலரை அமலாக்கப் பிரிவு கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் விசாரிக்கப்பட்டார். நேற்று பூரி ஜெகன்னாத்தின் பிஸினஸ் பார்ட்னரும், நடிகையுமான சார்மி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று(செப்., 3) தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரகுல் பிரீத் சிங் ஐதராபாத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடைபெற்று வருகிறது. ரகுல் நேரில் ஆஜரான வீடியோ வெளியாகி உள்ளது. இவரை தொடர்ந்து பாகுபலி புகழ் நடிகர் ராணா டகுபட்டி செப்டம்பர் 6ம் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.