பைக்கில் பக்கத்தில் உட்கார்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் – மும்பை போலீஸ் அறிவிப்பு

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தியதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரியவந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என மும்பை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டனர். அடுத்த 15 நாட்களில் இது அமலுக்கு வரும் என போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.