பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து – மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர் விநாயகம்

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

அப்போது அவர் பேசியது, கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன் என்றார்.

விநாயகனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை பார்வதி உள்ளிட்ட நடிகைகளும், பெண்கள் அமைப்பினரும் கண்டித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் விநாயகன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து முகநூலில் வெளியிட்ட பதிவில், ”நான் பெண்களுக்கு எதிராக அதன் தீவிரத்தை அறியாமல் சில கருத்துகளை தெரிவித்து விட்டேன். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.