புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் – இரண்டு பொறியாளர்கள் சஸ்பெண்ட்

சென்னை புளியந்தோப்பில் கட்டப்பட்ட தரமற்ற குடியிருப்பு விவகாரம் தொடர்பான பிரச்சனை சட்டசபையில் எதிரொலித்தது. இதையடுத்து அமைச்சர்கள் நேரில் சென்று அங்கு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், தரமற்ற குடியிருப்பை கட்டிய ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்ட்டில் சேர்ப்போம் என்றும் எவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.