Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – தபாங் டெல்லியை எளிதில் வீழ்த்திய மும்பை அணி

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பை அணியும் தபாங் டெல்லி அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியின் முடிவில் 19 – 11 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை அணி அபாரமாக விளையாடினர். மும்பை அணி வீரர்கள் ஆட்டத்தின் முன் தபாங் டெல்லி அணியினர் போராட்டம் எடுபடவில்லை.

இறுதியில், தபாங் டெல்லி அணியை 44 – 19 என்ற கணக்கில் மும்பை அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *