புதிய அமைச்சரவையில் 22 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம்

தமிழக முதல்-அமைச்சராக இன்று பதவி ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். 22 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகிய இருவரும் அமைச்சர்களாகி உள்ளனர். காட்பாடியில் இருந்து தேர்வான துரைமுருகனும் அமைச்சராகி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் இருந்து தேர்வான அ.மு.நாசர், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஐ.பெரியசாமி, சக்ரபாணி ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர்.

திருச்சியில் இருந்து கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கயல்விழி செல்வராஜ், மு.பெ.சாமிநாதன் ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகிய இருவரும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, விருதுநகரில் இருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, புதுக்கோட்டையில் இருந்து ரகுபதி, ஈரோட்டில் இருந்து முத்துச்சாமி, கரூர் செந்தில் பாலாஜி ஆகியோரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் இருந்து மனோதங்கராஜ், சிவகங்கையில் இருந்து பெரிய கருப்பன், திருவண்ணாமலை எ.வ.வேலு, நாமக்கல் மதிவேந்தன், நீலகிரி ராமச்சந்திரன், ராமநாதரபுரம் ராஜ கண்ணப்பன், பெரம்பலூர் குன்னம் சிவசங்கர், ராணிப்பேட்டை காந்தி, ஆலங்குடி மெய்யநாதன், விழுப்புரத்தில் இருந்து பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர்.