பி.வி.சிந்துவின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

பி.வி. சிந்து வெளியிட்டுள்ள அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெறுவதாகச் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானது.

ஆனால் அந்த அறிக்கையில் பி.வி. சிந்து ‘‘டென்மார்க் ஓபன் போட்டிதான் கடைசி. நான் ஓய்வு பெறுகிறேன். இதை எதிர்கொள்ள நான் தடுமாறுகிறேன். அதனால்தான் நான் முடித்து கொண்டு விட்டேன் என இதைப்பற்றி நான் எழுதுகிறேன். இதைப் படித்து நீங்கள் அதிர்ச்சியடைந்தால் அது புரிந்துகொள்ளக் கூடியதே.

இதை முழுவதும் படித்து முடிக்கும்போது என் கோணத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதற்கு நீங்களும் ஆதரவும் தருவீர்கள். இந்தக் கொரோனா தொற்று எனக்குப் புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் எதிராளியை வீழ்த்த என்னால் கடுமையாகப் பயிற்சி பெற முடியும்.

ஆனால் கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸை எப்படித் தோற்கடிக்க முடியும்? பல மாதங்களாக வீட்டுக்குள் இருக்கிறோம். ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் பல கேள்விகளை எதிர்கொள்கிறோம். இந்தியாவுக்காக டென்மார்க் போட்டியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதானால் விலக முடிவெடுத்துள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.