பிறந்தநாளில் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட சந்தானம்

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் சந்தானத்திற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், நடிகர் சந்தானம் தான் நடித்து வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளார். அதன்படி ‘சபாபதி’ என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சபாபதி படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் திரைக்கு வரும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.