பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – காலியிதிக்கு முன்னேறிய ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில்,  நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.