பிரபாஸின் பிறந்தநாளில் சிறப்பு அறிவிப்பை வெளியிடும் ‘ராதே ஷ்யாம்’ படக்குழு

பாகுபலி படம் மூலம் உலக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். இவர் வரும் அக்டோபர் 23 அன்று தனது பிறந்தநாளை கொண்டாட தயாராகிறார். அந்த தருணத்தில், ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் அக்டோபர் 23 அன்று #BeatsOfRadheShyam என்ற ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஸ்பெஷல் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்படத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூஜா ஹெஜ்டேவின் பிறந்தநாளன்று அவரது பர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். இப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. பன்மொழி திரைப்படமான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்க, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வம்சி மற்றும் ப்ரமோத் இப்படத்தை தயாரிக்கின்றனர்.