Tamilசினிமா

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.

சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார். இந்த விருதானது இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமாகும்.

கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார், பெரும்பாலும் தற்காலத்திய பிரச்சனைகளை சமாளிப்பதற்காக வரலாற்றினைப் பயன்படுத்துவார்.

இப்ராகிம் அல்காசி, பீ. வீ. கரந்த், அலிகியூ படம்சே, பிரசன்னா, அரவிந்த் கவூர், சத்யதேவ் துபே, விஜயா மேத்தா, ஷியாமானந்த் ஜலன் மற்றும் அமல் அலானா போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களால் அவரது நாடகங்கள் இயக்கப்பட்டன.

ஒரு நடிகராக, இயக்குனராக மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் இன்றும் அவர் நிலைத்து நிற்கிறார். இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் குணச்சித்தர, வில்லன் ஆகிய வேடங்களில் சிறப்பாக நடித்தவராவார். இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *