பிரதமர் மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ” நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் விநாயகர் அருள் அனைவருக்கு கிடைத்து அனைவருக்கும் மகிழிச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம், ஆகியவை கிடைக்க வாழ்த்துகிறேன் ” கணபதி பாப்பா மோரியா !என்று மோடி தெரிவித்துள்ளார்.