பிரஜன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் துவங்கியது

தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சீரியலில் கவனம் செலுத்தி வந்த பிரஜன், பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் பெரியத்திரையில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார். தற்போது இவர் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக குஹாசினி நடிக்கிறார்.

இந்தப் படத்தை, சீயோன் என்பவர் இயக்குகிறார். இவர் இதற்கு முன் பொதுநலன் கருதி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். பிரஜன், குஹாசினியுடன் வனிதா விஜயகுமார், கே.ராஜன், கஞ்சா கருப்பு போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். மாபின்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்க, ஒளிப்பதிவாளராக ஜிஜுவும், கலை இயக்குனராக முஜிபுரும் பணியாற்றுகின்றனர்.

இப்படம் அரசியல், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என்கிறார் இயக்குனர் சீயோன்.