பிசிசிஐ பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் வருடந்தோறும் கூட்டப்படும். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஆண்டு பொதுக்கூட்டம் வருகிற 24-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

தற்போது கொரோனா காலம் என்பதால், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் 22-ந்தேதி ஆர்.டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.